நூலக நிறுவனத்தின் 20வது ஆண்டு நிறைவும் தைப்பொங்கல் விழாவும் மட்டக்களப்பு மறைக்கல்வி நடுநிலைய மைய மண்டபத்தில் இடம் பெற்றது .

 

 

 

 

 

 




 



 


































நூலக நிறுவனத்தின் 20வது ஆண்டு நிறைவும் தைப்பொங்கல் விழாவும் மட்டக்களப்பு மறைக்கல்வி நடுநிலைய மைய மண்டபத்தில் நிகழ்நிலை ஊடாகவும் நேரடியாகவும் இடம் பெற்றது .

மேற்படி நிகழ்வானது நிகழ்நிலை ஊடாக நூலக நிறுவன பிரதம நிறைவேற்று அலுவலர் திருமதி. ரஞ்சுதமலர் நந்தகுமார் தலைமையில் 2025.01.15 மாலை இடம் பெற்றது .

நூலக நிறுவன எண்ணிம நூலக மீரதவு அலுவலர் செல்வன். பஞ்சாட்சரம் டிலக் ஷன் அவர்களால் நிகழ்ச்சி ஒழுங்கமைப்பு செய்யப்பட்டதோடு விருந்தினர் வரவேற்பு நிகழ்வையும் முன்னெடுத்திருந்தார்.

ஆரம்ப நிகழ்வாக அதிதிகளால் மங்கல விளக்கேற்றப்பட்டது

சிறப்பு விருந்தினர்களாக திரு. திஜாகராஜா சரவணபவன் (முன்னாள் மேயர் , மட்டக்களப்பு மாநகரசபை)

திரு. சஞ்சீவி சிவகுமார் (உதவிப் பதிவாளர், தென்கிழக்குப் பல்கலைக்கழகம். ஆளுகை சபை உறுப்பினர், நூலக நிறுவனம்)

திருமதி. நிலாந்தினி செந்தூரன் (வரலாற்றுத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர், கிழக்குப் பல்கலைக்கழகம்)

திரு. விவேகானந்தராசா தனஞ்சயன் (உதவிப் பிரதேச செயலாளர், போரதீவுப்பற்று பிரதேச செயலகம் )

திருமதி. லாவண்யா (ஆயுள்வேத வைத்தியர், அரசடி ஆயுள்வேத வைத்தியசாலை) ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .

அதனை தொடர்ந்து தமிழ் சமூகத்திற்காக தமது வாழ்வை அர்ப்பணித்து, ஆவணப்படுத்தலுக்கு முழுமையான பங்களிப்பை வழங்கி இவ்வுலக வாழ்வை நிறைவு செய்து விண்ணுலக வாழ்விற்குள் சென்ற நூலக நிறுவனத்தின் ஆளுகைச் சபை உறுப்பினர்களான ஈழநாதன் புவனேந்திரன், பீர் முஹமட் புண்ணியமீன், ஸ்ரீகாந்தலட்சுமி அருளானந்தம் மற்றும் ஏனைய அனைத்து உறவுகளையும் நினைவுகூர்ந்து ஒரு நிமிட நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.


நூலக நிறுவன உதவிப் பதிவாளர், தென்கிழக்குப் பல்கலைக்கழகம். ஆளுகை சபை உறுப்பினர், திரு. சஞ்சீவி சிவகுமார் அவர்கள் பிராந்திய ஆவணப்படுத்தலும் அதன் முக்கியத்துவமும் பற்றி உரையாற்றினார் .


கிழக்குப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர், திருமதி. நிலாந்தினி செந்தூரன் ஆய்வும் நூலக நிறுவனத்தின் பங்களிப்பும் பற்றி உரையாற்றினார் .

(நிகழ் நிலை நூலக நிறுவனத்திற்கும் கல்வியியலாளர்களுக்குமான ஒருங்கிணைப்பு - பேராசிரியர். எஸ். ரகுராம், பீடாதிபதி, கலைப் பீடம், யாழ்ப்பாண பல்கலைக்கழகம்)

(நிகழ் நிலை நூலக நிறுவனத்தின் அறிமுகம், வளர்ச்சிப் போக்கு மற்றும் செயற்பாடுகள் பற்றிய தெளிவுபடுத்தல் உரை - திரு. கோபிநாத் தில்லைநாதன் (ஆளுகைச் சபை உறுப்பினர், செயற்றிட்ட வழிநடத்துனர், நூலக நிறுவனம்)

நிகழ் நிலை நூலக நிறுவனத்தில் முன்னோர் ஆவணகத்தின் முக்கியத்துவமும் பற்றிய உரை - திரு. மயூரநாதன் இரத்னவேலுப்பிள்ளை (மூத்த கட்டிடக் கலைஞர், ஆளுகை சபை உறுப்பினர், நூலக நிறுவனம்)


நிகழ்வில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவுச் சின்னம் வழங்கும் நிகழ்வு இடம் பெற்றது .


- நூலக நிறுவன தலைவர் திரு. இரத்னஐயர் பத்மநாப ஐயர் அவர்கள் நிகழ் நிலை மூலம் ஆசியுரை வழங்கினார் .


20 ஆண்டுகளின் நிறைவில் நூலகத்தில் 1,23,000 அச்சு ஆவணங்களும், ஆவணகத்தில் 40,000 பல்லூடக ஆவணங்களும் ஆக 5,919,766 பக்கங்களைக் கொண்ட 163,000 ஆவணங்களை நூலக நிறுவனம் கடந்துள்ளது.

“பொங்கல் தினத்தில்” 21 ஆவது ஆண்டில் நுழைகிறோம். இவ்வாண்டில் 200,000 ஆவணங்களை எட்ட அனைவரது பங்களிப்பினையும் வேண்டி நிற்கிறோம்.

“ஊர்கூடி ஆவணப்படுத்துவோம் வாரீர்!”

அடைவுகள்