மட்டக்களப்பு கொத்துகுளத்து மாரியம்மன் ஆலயத்தில் பொங்கல் விழா நிகழ்வு 24.01.2025 வெள்ளிக்கிழமை நடைபெற்றது

 

 

 















  கால்நடை அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் யோ. தேவ சகாயம் கால்நடை அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் தலைமையில் இடம்பெற்றது.  பொங்கல் பானை பொங்க வைக்கும் நிகழ்வைத் தொடர்ந்து கோமாதாவிற்கான பூஜை வழிபாடுகளுடன் மங்கள விளக்கேற்றலுடன் அதிதியின் உரைக்கு பின் மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கி வைக்கப்பட்டது.

இதில் கௌரவ அதிதியாக மட்டக்களப்பு சுகாதாரத் திணைக்கள மாகாண பணிப்பாளர் வைத்தியர் எம் ஏ. நதீர் கால்நடை உற்பத்தி சுகாதார பிரதிப்பனிப்பாளர் எம் ஏ. காதிர் மட்டக்களப்பு மாவட்ட கால்நடை புலனாய்வு அதிகரி விவேக்கா கிசாந்தன் கலந்து கொண்டதோடு கொத்துக்குளத்து மாரியம்மன் நிர்வாக சபை உறுப்பினர்கள், மட்டக்களப்பு பொலீஸ் அத்தியக்சகர்கள் பொதுமக்கள், என பலரும் கலந்து கொண்டனர்.

 நிகழ்வின் இறுதியாக மாட்டுத் தொழுவம் அமைப்பதற்கு கால்நடை சுகாதார உற்பத்தி திணைக்களம் ஊடாக 27 கால்நடை பண்ணையாளர்களுக்கு தலா 50,000 ரூபாய் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.