சந்தையில் ஒரு தேங்காயின் விலை 250 ரூபாய் முதல் 300 ரூபாய் வரை அதிகரிக்கும் அபாயம்?

 


தேங்காய் சார்ந்த பொருட்கள் உட்பத்திக்கு குறைந்தபட்சம் 100 மில்லியன் தேங்காய்களை உடனடியாக இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், சந்தையில் ஒரு தேங்காயின் விலை 250 ரூபாய் முதல் 300 ரூபாய் வரை அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக இலங்கை தென்னை கைத்தொழில் சம்மேளனத்தின் தலைவர் ஜயந்த சமரகோன் தெரிவித்தார்.

தேங்காய் சார்ந்த தொழில்துறை துறைக்கு தேங்காய் பால், உறைந்த தேங்காய் துருவல்கள் அல்லது துண்டாக்கப்பட்ட உலர்ந்த தேங்காய் ஆகியவற்றை அவசரமாக இறக்குமதி செய்ய வேண்டும் என்று அரசாங்கத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அரசாங்கத்திடமிருந்து சாதகமான பதில் கிடைத்துள்ளதாகவும் கூறினார்.

மேலும், துண்டாக்கப்பட்ட உலர்ந்த தேங்காய்களைப் பயன்படுத்தி தேங்காய் எண்ணெய் தயாரிக்கலாம் என்றும் அவர் கூறினார். R