கடந்த 30 வருடங்களுக்கு பின்பு புதிய அரசாங்கத்தினால் கிளீனிங் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தினுடாக செங்கலடி மாவிலாறு பேருந்து சேவை.





வரதன்




புதிய அரசாங்கத்தினால் நேற்று நாடளாவிய ரீதியில் கிளீனிங் ஸ்ரீலங்கா வேலை திட்டம் முன்னெடுக்கப்பட்டது

 மட்டக்களப்பு  மாவட்டத்தில் ஜனாதிபதியின் எண்ணக்கருவை இவ் வேலைத் திட்டத்தின் ஊடாக அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும் திட்டத்தின் ஒரு கட்டமாக போக்குவரத்து சேவைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.


இதே வேலை நேற்று சீரற்ற கால நிலைக்கு மத்தியிலும் புதிய அரசாங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான கந்தசாமி பிரபுவினால் சேவை மக்களுக்காக ஆரம்பித்து வைக்கப்பட்டது

 யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இப் பிரதேசத்தில் கடந்த பல வருடங்களாக நிரந்தரமான ஒரு போக்குவரத்து வசதி இன்றி மக்கள் மிகவும் சிரமங்களை எதிர்நோக்கி வந்தனர்


இவ்விடயம் சம்பந்தமாக கந்தசாமி பிரபு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டு வந்ததை அடுத்து புத்தாண்டில் மட்டக்களப்பு செங்கலடி மாவிலாறு பகுதிக்கு பொது மக்களுக்கான இந்த போக்குவரத்து சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்,   கடந்த 30 வருடங்களுக்கு மேலாக இப் பிரதேசத்துக்கு பொது போக்குவரத்து வசதிகள் இல்லை,என்பது குறிப்பிடத்தக்கது


பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தலைமையில் இடம் பெற்ற இந்த நிகழ்வில் இலங்கை போக்குவரத்து சபை பிராந்திய முகாமையாளர், ஏறாவூர் சாலை முகாமையாளர், ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி,செங்கலடி பிரதேச செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.