மட்டக்களப்பு தாழங்குடா சீயோன் தேவாலயத்தின் 30 வருட பூர்த்தி விழா

 











மட்டக்களப்பு தாழங்குடா சீயோன் தேவாலயத்தின் 30 வருட பூர்த்தி விழா நேற்று (18) திகதி வெகு சிறப்பாக இடம் பெற்றது.

சீயோன் தேவாலயத்தின் போதகர் தலைமையில் இடம் பெற்ற நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் கலந்து சிறப்பித்தார்.

இந்நிகழ்விற்கு விசேட அதிதிகளாக மட்டக்களப்பு சீயோன் தேவாலய பிரதம போதகர் பாஸ்டர் ரொசான் மகேசன், திருமதி.ரொசான் மகேசன், சபைகளின் போதகர்கள், காத்தான்குடி பொலிஸ்காரர் நிலைய பொறுப்பத்திகாரி உள்ளிட்ட மேலும் பலர் கலந்து சிறப்பித்தனர்.

இதன் போது அதிதிகள் கௌரவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.