அண்மையில் எதிர்க்கட்சியின் பிரதான அரசியல் கட்சியின் காரியாலயத்திற்குச் சென்ற இலங்கையைச் சேர்ந்த கோடீஸ்வர வர்த்தகர் ஒருவர், கட்சியி தலைவர் ஒருவர் தமக்கு தனக்கு தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவி வழங்குவதாகக் கூறியதுடன் 50 கோடி ரூபா
பெற்றுக்கொண்டு பின்னர் தேசிய பட்டியல் பதவி வழங்கவில்லை என குற்றம் சுமத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவத்தால் அந்த அலுவலகத்தில் பெரும் பரபரப்பான சூழ்நிலையை உருவானதாக கூறப்படுகிறது. பிரபலம் வர்த்தகர் ஒருவருக்கு தேசியப்பட்டியல் உறுப்பினர் பதவி வழங்குவதாக கூறி ஐம்பது கோடி பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர் கட்சியின் முன்னாள் உறுப்பினராகவோ அல்லது தொகுதி அமைப்பாளராகவோ இல்லாத குறித்த வர்த்தகர் கட்சியின் தேசியப் பட்டியலில் இருந்தவராவர் என கூறப்பட்டது
இது தொடர்பாக கட்சி அலுவலகத்திற்கு வந்த தொழிலதிபர் கடும் குற்றச்சாட்டை முன்வைத்தபோது, அங்கிருந்த அதிகாரிகள், “பணம் பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது, அதை எடுத்தவர்களிடம் இருந்து பெற்ற்றுக்கொண்டால் நல்லது என கூறியுள்ளனர்
அப்போது அந்த தொழிலதிபர், “அதை பார்த்துகொள்கிறேன்” என்று கூறிவிட்டு அங்கிருந்து வெளியேறினார் என கூறப்பட்டது.