முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு 50000.00 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது .

 


பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனுக்கு எதிராக பிள்ளையான் என அறியப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தாக்கல் செய்த மனநஷ்ட வழக்கு கல்கிஸ்ஸை நீதிமன்றில் இன்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.

இந்த வழக்கில் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் சார்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் முன்னிலையானார்.

எனினும் வழக்கை தாக்கல் செய்த பிள்ளையான் இன்று மன்றில் முன்னிலையாவில்லை’ என்று ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

வழக்கு தொடுத்தவர்கள் இன்றைய தினம் விசாரணைக்கு வருகை தராமையினால் அவர் பிரதிவாதிக்கு  50,000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும்’ என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக எம்.ஏ சுமந்திரன் தெரிவித்தார்.

அத்துடன் ‘எதிராளி, வழக்கு தொடரப்பட்ட நீதிமன்றத்திற்கு உட்பட்ட பகுதியில் வசிப்பவர் இல்லை’ என்ற ஆரம்ப ஆட்சேபனையை எழுப்பியதாகவும் சுமந்திரன் குறிப்பிட்டார்.

இந்தநிலையில் குறித்த வழக்கு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 22ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.