(ஆர்.நிரோசன்)
மட்டக்களப்பு கல்வி வலயத்துக்குட்பட்ட
மட் / ஜோசப்வாஸ்
வித்தியாலயத்தில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி அடைந்த
மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று (30) வியாழக்கிழமை பாடசாலையின் பிரதான
மண்டபத்தில் இடம்பெற்றது.
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில்
சிறந்த பெறுபேறுகளைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்த மாணவர்களையும்
அவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களையும் வாழ்த்தி கௌரவித்து நினைவு சின்னம்
வழங்கும் நிகழ்வு பாடசாலையின் அதிபர் சி. என்.சில்வெஸ்டர் தலைமையில்
இடம்பெற்றது.
முதல் கட்ட நிகழ்வாக தாண்டவன்வெளி அருட்தந்தை ஜூலியன் அவர்களுடைய நற்சிந்தனை இடம்பெற்றதுடன்
கடந்த பத்து ஆண்டுகளுக்கு பிற்பாடு இம்முறையே
ஸ்.மு.பிரணித் 142, அ.சர்வித் 142 , றே.ஆகிஸ்149, கி.ஏனோக் ஜெய்சன் 147 ,
தே.ஜானக்ஷன்140, ச.அக்சா 150 புள்ளிகளை வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சிறந்த முறையில்
ஆறு மாணவர்களுமே
சித்தியடைந்துள்ளனர்.
அவர்களை ஊக்குவிக்கும் முகமாக பாடசாலையின் பழைய மாணவர்களினால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
மேலும் தரம் 01 இற்கு புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வானது இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
பிரதம
அதிதியாக பாடசாலையின் முன்னால் அதிபர் ஜே.கே விமல்ராஜ் அவர்களும் சிறப்பு
அதிதிகளாக அபிவிருத்தி சபையின் உறுப்பினர்கள், பாடசாலை மாணவர்களின்
பெற்றோர்கள் பாடசாலையின் நலன் விரும்பிகள் மற்றும் பழைய மாணவர்கள்
ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.