நைஜீரியாவில் எரிபொருள் தாங்கி வெடித்து ஏற்பட்ட விபத்தில் 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்

 


நைஜீரியாவில் எரிபொருள் தாங்கி வெடித்து ஏற்பட்ட விபத்தில் 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எரிபொருள் தாங்கி கவிழ்ந்த பிறகு மக்கள் எரிபொருளைப் பெறுவதற்காக ஓடிக்கொண்டிருந்தபோது அது வெடித்ததாக அந்த செய்திகள் தெரிவிக்கின்றன.

தலைநகர் அபுஜாவையும் வடக்கு நகரமான கடுனாவையும் இணைக்கும் வீதியில் 60,000 லிட்டர் பெட்ரோலை ஏற்றிச் சென்ற எரிபொருள் தாங்கியே விபத்துக்குள்ளானதாக நைஜர் மாநிலத்தின் ஃபெடரல் வீதி பாதுகாப்புப் படையின் பிரதானி தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தில் இறந்தவர்களில் பலர் அடையாளம் காண முடியாத அளவுக்கு எரிந்து போயிருந்ததாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

அத்துடன் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.