செய்தி ஆசிரியர்
மட்டக்களப்பு கல்லடி விநாயகர் வித்தியாலய 79வது ஆண்டு விழா நிகழ்வு பாடசாலை அதிபர் திருமதி s. விநோதன் தலைமையில் இன்றைய தினம்(2025.01.21) நடை பெற்றது .
இவ்விழாவில் பிரதம விருந்தினராக மட்டக்களப்பு முன்னாள் மாநகர முதல்வர் திரு T. சரவண பவன் கலந்துகொண்டதுடன் சிறப்பு விருந்தினர்களாக பாடசாலை மேம்பாட்டு திட்ட இணைப்பாளர் திரு .கே. எழில்வேந்தன் பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் P. குணபாலராஜா மற்றும் சித்தி விநாயகர் ஆலய நிர்வாக செயலாளர் S. பிரேமானந்தன் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர் .
ஆரம்ப நிகழ்வாக குத்து விளக்கேற்றபட்டதுடன் தமிழ் மொழி வாழ்த்து மற்றும் பாடசாலை கீதம் இசைக்கப்பட்டன . அதனைத் தொடர்ந்து பாடசாலை தினத்தை நினைவு கூரும் வகையில் 79 வது ஆண்டு விழா கேக் வெட்டப்பட்டு விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் பகிரப்பட்டது .
விழாவின் இறுதிநிகழ்வாக பாடசாலை வளாகத்தில் அதிதிகளால் தென்னம் கன்றுகள் நடப்பட்டன .
விழாவிற்கு அதிபர் , ஆசிரியர்கள் , பெற்றோர்கள் , மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள் .