மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ள அனர்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு AU LANKA நிருவனத்தினால் ChildFund நிறுவனத்தின் நிதி அனுசரணையில் 02ம் கட்ட நிவாரணம வழங்கப்பட்டது .

 

 

 

 




















வெள்ள அனர்த்த 02ம் கட்ட உதவி - AU Lanka நிறுவனம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் 2024ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்பட்டவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், இயல்பு வாழ்க்கையை ஏற்படுத்த AU Lanka  நிறுவனத்தினால் பல்வேறு சேவைகளும், மனிதாபிமான பணிகள் முன்னெடுக்கப்பட்டது. 


ChildFund நிறுவனத்தின் நிதி அனுசரணையில் முன்னெடுக்கப்பட்ட 02ம் கட்ட உதவித் திட்டத்தில் 0-5 வயதிற்குட்பட்ட சிறுவர்களின் போஷாக்கினை மேன்படுத்துவதற்காக கிரான் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட கோரகல்லிமடு, தேவபுரம், கிரான் கிழக்கு மற்றும் மேற்கு,  மொறக்கொட்டான்சேனை. சந்;திவெளி, பாளையடித்தோனா ஆகிய கிராம சேவகர் பிரிவினைச் சேர்ந்த 748 தெரிவு செய்யப்பட்ட பிள்ளைக்ளைக் கொண்ட குடும்பங்களுக்கும்,  வவுணதீவு பிரதேச செயலயப் பிரிவுனைச் சேர்ந்த விளாவெட்டுவான், வவுணதீவு, உன்னிச்சை, புதுமண்டபத்தடி, பாவற்கொடிச்சேனை, பருத்திச்சேனை, குறிஞ்சாமுனை, கொத்தியாபுலை, கரையாக்கன்தீவு, கரவெட்டி, காஞ்சிரன்குடா, இலுப்படிச்சேனை, காந்திநகர், ஈச்சன்தீவு மற்றும் ஆயித்தியமலை - வடக்கு ஆகிய கிராம சேவகர் பிரிவினைச் சேர்ந்த 165  தெரிவு செய்யப்பட்ட பிள்ளைக்ளைக் கொண்ட குடுப்பங்கள் உள்ளடங்கலாக மொத்தமாக 913 சத்துணவுப் பொதிகள் அண்மையில் பகிர்ந்தளிக்கப்பட்டது. இதற்காக ரூபா1,751,134 செலவு செய்யப்பட்டது.

 
T R. மார்ஷல் (இணைப்பாளர் - சுகாதாரம் மற்றும் போஷக்கு), காலநிலை மாற்ற செயற்திட்ட உத்தியோகத்தர்கள், அனுசரணைத்திட்ட இணைப்பாளர் மற்றும் அனுசரணைத்திட்ட கள உத்தியோகத்தர்கள் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் ஜெகன் ராஜரெட்ணம் (இணைப்பாளர் - கல்வி,  அனர்த்த முன்னாயத்த தடுப்பு மற்றும் காலநிலை மாற்ற செயற்பாட்டு பொறுப்பாளர்) அவர்களின் ஒருங்கிணைப்பில்; நடைமுறைப்படுத்தப்பட்டது. இச் செயற்திட்டத்திற்கு வேண்டிய நிபுணத்துவ உதவிகளை CHILD FUND மற்றும் AU  LANKA  நிறுவனத்தின் துறைசார் நிபுணர்களின் வழிகாட்டலில் மிகவும் வினைத்திறனாக முன்னெடுக்கப்பட்டது. 


AU Lanka நிறுவனமானது மட்டக்களப்பு மற்றும் புதுக்குடியிருப்பு (மூல்லைத்தீவு) ஆகிய மாவட்டங்களில் அனுசரணைத் திட்டம், சுகாதாரம் மற்றும் போஷாக்கு, கல்வி, இளைஞர் அபிவிருத்தி, அனர்த்த முன்னாயத்த தடுப்பு மற்றும் காலநிலை மாற்ற செயற்பாடு, சிறுவர் பாதுகாப்பு, வலுவிழந்தோரின் சழூக மட்ட அபிவிருத்தி செயற்திட்டம், வாழ்வாதார உதவித் திட்டம் போன்றவற்றினை முன்னெடுப்பதற்கு ChildFund நிறுவனம் தனது பூரண ஒத்துழைப்புக்களையும் நிதியுதவிகளையும் முன்னுரிமையடிப்படையில் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கதொன்றாகும்.