மயிலத்தமடு மாதவணை கால்நடை பண்ணையாளர்களின் தொடரும் அறநெறி போராட்டத்தின் மத்தியில் மீண்டும் 2025ம் ஆண்டு பட்டிப்பொங்களுக்கான அழைப்பும் விடுக்கப் பட்டுள்ளது.
அந்த இடத்தில்{மயிலத்தமடு மாதவணையில்} இந் நிகழ்வினை நடாத்துவதையிட்டு மிகவும் ஆர்வத்துடன் வரவேற்கின்றேன்.
அதே நேரம் சமீப காலமாக மேச்சல்தரை பிரச்சனை இவ்வளவு மோசமான பின்னடைவை [எனது பார்வையில்]நோக்கி சென்றதற்கு அல்லது வழி நடாத்தப் படுவதற்கு
# என்ன காரணம்
# அல்லது யார் காரணம்
தற்சமய நிலையை மட்டும் கருத்திற் கொள்ளாமல் கடந்த காலங்களையும் கருத்திற் கொண்டு நோக்குமிடத்து தெளிவான விளக்கத்துடன் நாம் செயல்ப்படுகின்றோமா என சிந்திக்க தோன்றுகிறது. ஏனென்றால் இப்பிரச்சணைக்கான தீர்வென்பது ஒரு சமூகத்தின் வாழ்வாதார த்திற்கும் அப்பால்ப் பட்டது என்பதனைக் கருத்திற் கொள்ள வேண்டியுள்ளது.அவற்றில் சிலவற்றை ஒவ்வொன்றாக நோக்குவோமானால்
* நில உரிமை
* உயிர் வாழும் உரிமை
* பாரம்பரிய கால் நடைஇனத்தி்ன் அடையாளம்
* பிரதேச ஆக்கிருமிப்பு
* எதிர்கால நல்லினக்கத்திற்கான குந்தக நிலை
* வருங்கால சந்ததிகளுக்கான சிச்சயமற்ற வாழ்வு.
* இயற்கை வள ஆக்கிருமிப்பு
* எமது மாவட்ட துறைசார்ந்த அதிகாரிகளி்ன் கையாளாகாத செயற்பாடுகள்.
* எமது மாவட்ட அரசியல்வாதிகளின் இயலாமை *மகாவளித் திணைக்களத் திட்டத்தின் மூலம் வரக்கூடிய ஆபத்துக்கலான சிங்கள குடியேற்றங்கள் இனப்பரம்பலினால் வரப்போகும் அரசியல் மாற்றங்கள் மாவட்டத்தின் நிருவாக அதிகாரங்களின் மாற்றம்
என பல விடயங்களை உள்ளடக்கியதாக மகாவளி அபிவிருத்தி [அழிவு விருத்தி] திட்டம் காணப்படுகின்றது.எமது முழுமையான ஒத்துழைப்புடன் மிக ஆபத்தான மேற்படித்திட்டம் நிறைவேற்றப் படும் பட்சத்தில் எமது கைவிரல்களால் எமது கண்களைக் குத்திக்கொள்வதற்கு சமனாக காணப்படுகிறது.
அதே நேரம் முதலில் கிடைப்பதை பெற்றுக் கொள்வோம் என்ற பிழையான வழி நடத்தல் எம்மால் எப்படி ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதற்கெல்லாம் ஒரு சிலரின் சுயநலப்போக்கு காணப்படுகிறதா? அதனால்தான் இன்று நீர்த்துப் போன ஒரு போராட்ட களமாக பண்ணையாளர்களது போராட்டகளம் மடை மாற்றப்பட்டுள்ளதா என சிந்திக்க தூண்டுகிறது.எமது மாவட்டத்தில் காணப்படும் மேச்சல்த் தரைப் பிரச்சணைக்கு நிரந்தர தீர்வு இல்லாமல் போராட்ட களத்தின் வீரியத்தை குறைத்து உண்மையான சிவில் சமூகத்தின் ஊடாட்டத்தினை இல்லாமல் செய்து மிகப் பெரிய ஏமாற்று நாடகத்தை முன்னின்று நடாத்திக் கொண்டிருப்பவர்கள் யார்? ஏன்
எதற்காக இந்த அப்பாவி பண்ணையாளர்கள் பந்தாடப்படுகிறார்கள் .
இதற்குப் பின்னால் உள்ள அரசியல் சதி என்ன ? சற்று சிந்தித்துப் பாருங்கள் உறவுகளே. தமிழர்கள் இப்படித்தான் காலா காலமாக ஏமாற்றப்பட்டு வந்துள்ளார்கள். இந்தப் பிரச்சணைக்கான நிரந்தர தீர்வைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக எவ்வளவு இழப்புக்கள் எவ்வளவு அச்சுறுத்தல்கள் எவ்வளவு கொலை மிரட்டல்கள் தியாகங்கள் அர்ப்பனிப்புக்களை நாம் செய்துள்ளோம்.பிழையானமுடிவுகளை நாம் ஏற்றுக் கொள்வதற்காகவா ?
நிச்சயப்படுத்தப் பட்ட ஒரு தீர்வு கிடைக்கு முன் இப்போராட்ட களம் எப்படி
யாரால்
நீர்த்துப் போக செய்யப்பட்டது. காலாகாலமாக தங்களை கற்ற சிவில் சமூகம் என கூறிக்கொள்ளும் ஒரு சிலர் அரசினுடைய கைக் கூலிகளாக இரகசியமாகவும் மற்றும் தங்களுடைய புத்தி சாதுரியத்தையும் பயன் படுத்தி அரசின் இனவாத போக்குடன் ஒத்துழைத்து உரிமைகளுக்காக குரல் கொடுப்பவர்களை இனவாதிகளாக சித்தரித்து தமக்கான சலுகைகளை அனுபவித்து வருகின்றனர். பண்ணையாளர்கள் பிரச்சணைகளுக்கு அப்பாலும்இது போன்ற பிழையான செயற்பாடுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இவ்வாறிருக்க கடந்த காலங்களில் ஒரு வழக்கு மட்டக்களப்பு மாவட்ட நீதவான் நீதி மன்றத்தில் அரச அதிகாரிகளுக்கு எதிராக பண்ணையாளர்களுடன் இணைந்து சிவில் சமூக உரிமை சார் நிறுவணம் ஒன்றின் மூலம் தொடரப்பட்டது.ஆனாலும் ஒரு சில அரசியல்வாதிகளின் பிழையான சட்ட நடவடிக்கைகளின் காரணத்தினால் சிவில் சமூகத்தினரால் தொடரப்பட்ட வழக்கினை முன்னகர்த்தி செல்ல முடியாமல் போய்விட்டது.அத்துடன் நீதிமன்ற தீர்ப்பும் நடைமுறைப் படுத்த படவில்லை.அதனை மீறியவர்கள் மீது கொழும்பு உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தஅரசியல் வாதிகளால் மேற்கொண்டு நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடரப்படவில்லை என்பதும் வரலாறு.
இந்நிலையில்தான் மயிலத்தமடு மாதவணை பண்ணையாளர்கள் மூலம் எதிர்வரும் 16.01.2025ம் திகதியன்று பட்டிப் பொங்கள் நிகழ்விற்கான அழைப்பு அரச அதிகாரிகளுக்கும் சேர்த்து விடுக்கப்பட்டிருக்கின்றது.
அப்படியானால் எதற்காக அரச அதிகாரிகளுக்கு எதிராக 2021ம் ஆண்டில் மட்டக்களப்பு நீதவான் நீதிமண்றில் பண்ணையாளர்களால்வழக்கு தொடரப்பட்டது.அப்படியானால் தற்சமயம் அரச அதிகாரிகளின் செயற்பாடுகளால் எமது கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளதா?ஆம் என்றால் எதற்கு போராட்ட பந்தல்?
மகாவளித் திணைக்களத்தின் மூலம் மேச்சல் தரை பிரச்சணைக்கு தீர்வு காணலாம் என எண்ணுவது முட்டாள்த் தனமான முடிவாகும்.
மகாவளித் திணைக்கள திட்டத்தின் மூலம்தான் தீர்வென்றால் எதிர் காலத்தில் என்றுமே தீர்க்க முடியாத சிக்கல்களுக்கும் இழப்புக்களுக்கும் எமது வருங்கால சமூகம் முகம்கொடுக்க நேரிடும். இந்த வரலாற்றுத் தவறிணை மகாவளித் திணைக்களத்தினூடாக செய்ய முணையாதீர்கள்.இவையெல்லாம் எமக்கான அபிவிருத்தியல்ல {எமத்கான அழிவு விருத்தி} கவர்ச்சிகரமான இதுபோன்ற பல ஏமாற்று நாடகங்களை நாம் வரலாற்று ரீதியாக கண்டுள்ளோம்.சுற்று சூழல் அழிவடைவதும் இயற்கை சமநிலை பாதிக்கப் படுவதெல்லாம் இதுபோன்ற பிழையான அபிவிருத்திகலே காரணமாக அமைகின்றது.எனவே சாதாரண மனிதர்களாக நிந்திக்கும் அனைவருக்கு இதில் பொறுப்புள்ளது.நாம் விட்டுச் செல்லும் வளங்களும் அடையாளங்களுமே எமது எதிர்கால சந்ததியினருக்கு உறுதுணையாக அமையும். எனவே கவர்ச்சிகரமான வார்த்தை ஜாளங்களின் மூலம் மேற்படித் திட்டத்திற்கு முண்டுகொடுப்பவர்களே எதிர் கால சந்ததியினருக்கு பொறுப்புக் கூற வேண்டிவரும். இதுவொரு வரலாற்றுத் தவறாகவும் அமையும் என்பதனையும் நினைவுபடுத்த விரும்புகின்றேன்.
நன்றி.
மனிதஉரிமை செயற்பாட்டாளர்
ச.சிவயோகநாதன்[சீலன்] 11.01.2025