அண்மை நாட்களாக வவுனதீவு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட எட்டாம் கட்டை பகுதியில் குரங்கின் தாக்கம் அதிகரித்துள்ளது.
ஆதித்தியமலை தெற்கு பிரதேசத்தில் கச்சான் விளை நிலங்களை நாசம் செய்துள்ளது. இதனால் தங்களது ஜீவனோபாயமாக இருக்கும் தங்களின் இரண்டு ஏக்கர் நிலப்பரப்பை கொண்ட பயன் தரும் கச்சான் விளைச்சல் நிலங்களை முற்றாக அழித்து சேதப்படுத்தியுள்ளது.
இதனால் தங்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படுவதினால் இந்த குரங்கின் தாக்கத்திலிருந்து விடுபட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாதிப்படைந்த பகுதிக்கு விஜயத்தினை மேற்கொண்டு இதற்கான சரியான தீர்வை பெற்றுத் தர வேண்டும் எனவும் எட்டாம் கட்டை பிரதேச கிராமத்தில் வசித்து வரும் விவசாயிகள் தெரிவித்தனர்.