இலங்கை இந்திய பயணிகள் கப்பல் சேவை நாளை ஆரம்பமாக உள்ளது

 



சீரற்ற காலநிலை காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசன்துறைக்கான பயணிகள் கப்பல் போக்குவரத்து நாளை முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இந்தநிலையில் நிலவும் காலநிலையைக் கருத்திற் கொண்டு கப்பல் போக்குவரத்தை மீண்டும் ஆரம்பிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகக் குறித்த கப்பல் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் சுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.