புதிய அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளில் ஒன்றான அத்தியா வசிய தேவைகளின் கட்டண குறைப்பு சம்பந்தமான பொதுமக்களின் ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளும் நடவடிக்கை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது
முன்மொழியப்பட்ட மின்சார கட்டண திருத்தம் தொடர்பான ஆலோசனை கிழக்கு மாகாணத்திற்கான பிரதான அமர்வு இன்று மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலகத்தில் ஆணைக் குழுவின் செயலாளர் திருமதி W. நடிஜா தலைமையில் இடம்பெற்றது
இதன்போது கிழக்கு மாகாணத்தில் உள்ள 3 மாவட்டங்களிலும் இருந்து மக்கள் பிரதிநிதிகள் மின்சார கட்டணம் திருத்தம் தொடர்பாக ஆலோசனைகளை அமர்வு போது பதிவு செய்தனர்
மின்சார கட்டணத்தின் முக்கியத்துவம் பற்றியும் இதன் குறைவால் தங்களுக்கு கிடைக்க போகும் நன்மைகள் பற்றியும் குறைந்தது 40 வீத குறைவாக மின்சார கட்டணத் குறைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும்
சூரிய சக்தி மூலம் மின்சார பத்திக்கான முன்மொழிவுகளையும் இங்கு கலந்து கொண்டவர்கள் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்
இடம்பெற்ற கிழக்கு மாகாண பிரதான அமர்வு இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் பணிப்பாளர் டம்மிக்க குமாரசிங்க ஆணைக்குழுவின் தவிசாளர் பேராசிரியர் லலித்த சந்திரலால் ஆணைக்குழுவின் பிரதி பணிப்பாளர் வைத்தியர் நிலாந்த சாம்பவிக்க ஆனைக் குழுவின் உயர் அதிகாரிகள் ஊழியர்கள் மற்றும்
மாகாண சுகாதார அமைப்பின் பிரதிநிதிகள் கைத்தொழிலாளர்கள் அரிசி உற்பத்தியாளர்கள் விவசாய அமைப்பின் பிரதிநிதிகள் கட்டிட ஒப்பந்தக் காரர்கள் சிவில் சமூகப் பிரதிநிதிகள் கல்வித் திணைக்கள உயர் அதிகாரிகள் பொதுமக்கள் என பலரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்
SUPPER