கிழக்கு மாகாணத்தில் நிலவிய சீறற்ற காலநிலையினால் மூடப்பட்ட பாடசாலைகள் மீண்டும் கற்றல் செயற்பாடுகளுக்காக இன்று ஆரம்பம்.


 

 

 

 

 

 

வரதன்
 

 

கிழக்கு மாகாணத்தில் தொடர்ச்சியாக வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு வருவதை அடுத்து  மாணவர்களின் பாதுகாப்பை கவனத்தில் கொண்டு கிழக்கு மாகாண ஆளுநரினால் நேற்றைய தினம் மாகாணத்தின் சகல பாடசாலைகளும் விடுமுறை வழங்கப்பட்டிருந்தது இருப்பினும் கல்வி அமைச்சினால் இன்று மாகாணத்தில் உள்ள சகல பாடசாலைகளும் கற்றல் செயற்பாடுகளுக்காக இன்று காலை ஆரம்பம்

 மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள  கல்வி வளையங்களிலும் கற்றல் செயற்பாடுகளுக்காக இன்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்டிருந்தது

 காலநிலை ஓரளவு சீரடைந்து இருந்ததனால் பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள் உற்சாகத்துடன் பாடசாலைகளுக்கு சமூக அளித்ததை காணக்கூடியதாக இருந்தது தூர இடங்களுக்கான பாடசாலை பஸ் சேவைகளும் முன்னெடுக்கப்பட்டிருந்தன இருப்பினும்

 படுவான் கரை பகுதியில் சில பாடசாலைகளை அண்டிய தாழ்நிலப் பிரதேசங்களில் வெள்ள நீர் ஊடறுத்து செல்வதனால் மாணவர்களின் வரவு குறைவாக இருந்தது
நேற்று இரவு மாவட்டத்தில் அடை மழை பெய்த போதிலும் இன்று காலை சற்று தணிந்திருந்த காரணத்தினால் மாணவர்கள் பாடசாலைகளுக்கு உற்சாகத்துடன் வருகை தந்ததை காணக் கூடியதாக இருந்தது 90விதமான மாணவர்களின் வரவு பதிவானதாக பாடசாலைகளின் அதிபர்கள் தெரிவிக்கின்றனர்.