ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கா அவர்களின் எண்ணக் கருவிலே தோற்றம் பெற்ற "க்ளீன் ஸ்ரீ லங்கா" வேலை திட்டமானது மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகவும் வெற்றிகரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது .
முதல் கட்ட வேலை திட்டமாக அமைப்பாளர் திலகநாதன் அவர்கள் தலைமையில் 40 வருடங்களாக பஸ் போக்குவரத்து இல்லாத மாவலியாறு பிரதேசத்திற்கு பஸ் சேவை வழங்கப்பட்டது , ,அதனைத் தொடர்ந்து (12/01/25) அன்று வரலாற்றில் முதல் தடவையாக மயிலம்பாவலி கிராமத்தில் பிரதான வீதியில் வாராந்த சந்தை திறந்து வைக்கப்பட்டது.
இக் கிராமத்தை சுற்றி தன்னாமுனை, சவுக்கடி, தளவாய் விபுலானந்தபுரம், ஆறுமுகத்தான் குடியிருப்பு ,என்று பல கிராமங்கள் இருக்கின்றன. இவர்கள் சந்தை வசதிக்காக 5 கிலோ மீட்டருக்கு அதிகமாக செல்ல வேண்டிய தேவை இருக்கிறது, இந்த சந்தை அமைக்கப்பட்ட உடன் இந்த அனைத்து கிராம மக்களும் நடைபயணமாக சென்று பொருட்களை குறைந்த விலையில் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கிறது, மற்றும் அந்த ஊரிலே உற்பத்தி செய்கின்ற விவசாய பொருட்கள் சந்தைப்படுத்தக் கூடிய வாய்ப்பும் உருவாக்கப்பட்டு இருக்கிறது, இதன் மூலம் சாதாரண மக்கள் பெரிதும் பயனடைவதாக மக்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்