தேசிய மக்கள் சக்தி கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு விசா வழங்குவதை பிரித்தானியா நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாராளுமன்ற உறுப்பினராக இராஜதந்திர கடவுச்சீட்டை வைத்திருக்கும் போது, காமன்வெல்த் நாடுகளின் உறுப்பினர்களுக்காக நடத்தப்பட்ட தகவல் தொழில்நுட்ப நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக விசாவிற்கு விண்ணப்பித்த போது இந்த நிராகரிப்பு செய்யப்பட்டது.
தகவல் தொழிநுட்ப பொறியியலாளர் என்று கூறி இந்த உறுப்பினர் விடுத்த கோரிக்கையை ஏற்காமல் விசா விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளதாக சமகி ஜன பலவேக நாடாளுமன்ற உறுப்பினர் திரு.பிரசாத் சிறிவர்தன தெரிவித்தார்.
இதன்படி, அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர் ஒருவர் நிகழ்வுக்கு செல்லவில்லை எனவும், எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவரே அதில் இணைந்து கொண்டதாகவும் அவர் கூறினார்.
இந்த நாடாளுமன்ற உறுப்பினர் பொறியியலாளர் என்று கூறி மக்களை ஏமாற்றி பாராளுமன்றத்தில் பிரவேசித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.