புதிய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் க்ளீன் ஶ்ரீ லங்கா திட்டத்துக்கு பூரணமான ஆதரவு வழங்கப்படும் -நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஶ்ரீநேசன்

 

 


 புதிய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் க்ளீன் ஶ்ரீ லங்கா திட்டத்துக்கு ஆதரவளிக்கப்படும்” என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஶ்ரீநேசன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில்  (21) உரையாற்றிய அவர், “நாட்டையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று விரும்ப முடியும்” என தெரிவித்தார்.  ‘அந்த வகையில் இந்த க்ளீன் ஶ்ரீலங்கா திட்டம் என்பது நல்ல விடயம்’
‘எமது நாடு ஊழல், மோசடி, திருட்டு, லஞ்சம் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களால் நிரம்பி காணப்படுகிறது”முன்னாள் ஆட்சியாளர்கள், அவ்வாறான குற்றவாளிகளை சுத்தம் செய்யவில்லை என்பது இந்த க்ளீன் ஶ்ரீலங்கா திட்டம் ஊடாக வெளிப்படுகிறது’ என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஶ்ரீநேசன் தெரிவித்தார்.