மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு இந்திய அரசால் உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இந்தியா மற்றும் இலங்கை இடையே 75 ஆண்டுகால நீண்டகால இராஜதந்திர உறவை அடிப்படையாகக் கொண்டே இந்த உதவி வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இந்த உலர் உணவுப் பொதிகள் இந்தியாவினால் வழங்கப்பட்டுள்ளன.
இந்த உலர் உணவுப் பொதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களிடையே விநியோகிக்கப்பட உள்ளன.