வாழைச்சேனை பொலிஸ் பிரிவின் பிறைந்துறைச்சேனையில் குடும்பஸ்த்தர் ஒருவர் சகோதரரால் கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளாக பொலிசார் தெரிவித்தனர்.
இச் சம்பவமானது புதன் கிழமையன்று (22) சாதூலிய பாடசாலை வீதி வாழைச்சேனையைச் சேர்ந்த சீனிமுஹம்மது முசாமில் வயது (43) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சகோதரர் (தம்பி) உயிரிழந்தவரின் வீட்டிற்கு சென்று பணம் தருமாறு கேட்டதாகவும் அதனை அவர் தருவதற்கு மறுப்பு தெரிவித்தபோது இடம்பெற்ற வாக்குவாதத்தினால் கோபம் கொண்டவர் அவரை கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கிவிட்டு தப்பி சென்றுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
தப்பி ஓடி தலைமறைவாகியுள்ளவரை கைது செய்யும் நடவடிக்கையில் பொலிசார் ஈடுபட்டுள்ளனர்.சடலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த பண்டாரவின் பணிப்பின் பேரில் பெருங்குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தினேஷ் (8656) தலைமையிலான குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.