இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினை சந்தித்துள்ளார்

 


இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமானுக்கும் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.

அயலக தமிழர் மாநாடு நேற்று சென்னையில் நடைபெற்ற நிலையில், செந்தில் தொண்டமான், மு.க ஸ்டாலினைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்

இலங்கை வாழ் தமிழர்களின் வளர்ச்சி குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன், கடந்த காலங்களில் இலங்கை மக்களுக்கு தமிழக முதலமைச்சர் வழங்கிய உதவிகளையும் செந்தில் தொண்டமான் நினைவுகூர்ந்துள்ளார்.