செய்தியாசிரியர்
மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளர் எஸ் தனஞ்ஜெயன் அவர்களின் ஏற்பாட்டில் நடமாடும் சேவை ஒன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது .
மட்டக்களப்பு மாநகரசபை எல்லைக்குற்பட்ட பொதுமக்கள் ஆதன வரி , வியாபாரவரி மற்றும் விளம்பர வரி ஆகியவற்றை இலகுவாக செலுத்தும் வகையில் இவ் நடமாடும் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது .
நடமாடும் சேவையின் முதல் கட்டமாக நேற்றைய தினம் 2025.01.09 திகதி காலை 9 மணி தொடக்கம் பிற்பகல் 1.30 வரை மட்டக்களப்பு கல்லடி உப்போடை பொது வாசிகசாலையில் இடம் பெற்றது . மாநகர சபையின் அறிவுறுத்தலுக்கு அமைய பிரதேசவாழ் பொதுமக்கள் 2025 ஆண்டுக்கான ஆதன வரியை 10% கழிவுடன் செலுத்தி பற்று சீட்டுக்களை பெற்றுக்கொண்டனர் .
பொதுமக்களால் மாநகர சபைக்கு செலுத்தப்படும் வரியானது மட்டக்களப்பின் அபிவிருத்தி நடவடிக்கைக்காகவே பயன் படுத்தப்படுகிறது . உரிய காலத்தில் பொது மக்கள் வரிகளை செலுத்தி அபிவிருத்தி நடவடிக்கையை திறன்பட முன்னெடுப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு மாநகர சபையினர்
கேட்டுக்கொள்கின்றனர் .
எதிர்வரும் 2025.01.13திகதி காலை 10.30 முதல் மாலை 6.30 வரை புன்னைச்சோலை கலாச்சார மண்டபத்தில் மேலும் ஒரு நடமாடும் சேவை
நடை பெற உள்ளதால் பொது மக்கள் வியாபாரவரி மற்றும் விளம்பர வரி ஆகியவற்றை இலகுவில் செலுத்தலாம் என்பதோடு 2025 ஆண்டுக்கான ஆதன வரியை 10% கழிவுடன் செலுத்தி பற்று சீட்டுக்களை பெற்றுக்கொள்ள முடியும் என்று மாநகர சபை உத்தியோகத்தர்கள் தெரிவிக்கின்றனர் .