வரதன்
அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் திட்டங்ககளில் ஒரு கட்டமாக கல்வி
அமைச்சினால் தேசிய பரிட்சைகளில் திறமைகளை காட்டும் மாணவர்களை கௌரவிக்கும்
முகமாக அவர்களை மகிழ்ச்சிகரமாக வைக்கும் நோக்குடன் அவர்களை பாராட்டி
கௌரவிக்கும் நிகழ்வு இன்று மட்டக்களப்பு புனித மிக்கல் கல்லூரியில் பாடசாலை
அதிபர் அண்டன் பரணிஜோசப் தலைமையில் இடம்பெற்றது
வெளியாகிய
புலமைப் பரிசில் பரிட்சையில் சித்தி அடைந்த மாணவர்களை கௌரவிக்கும்
நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு வளையக்கல்வி பிரதி பணிப்பாளர்
திருமதி நிரோஷினி மகேந்திர குமார் கலந்து கொண்டு அதிக புள்ளிகளைப் பெற்ற
மாணவர்கள் இங்கு கௌரவித்து வைக்கப்பட்டனர்
கடந்தாண்டு இடம்பெற்ற இந்த பரிட்சையில் தமது திறமைகளை வெளிப் படுத்திய மாணவர்கள் இங்கு கௌரவிக்கப்பட்டனர்
மாணவர்கள்
பேண்டு வத்தியம் முழங்க அரங்குக்கு அழைத்து வரப்பட்டு பிரதம அதிதியால்
மலர் மாலை அணிவிக்கப்பட்டு சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டது
இன்றைய இந்த நிகழ்விற்கு பாடசாலையின் பிரதி அதிபர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் பாடசாலை சமூகத்தினர் பலரும் கலந்து சிறப்பித்தனர்