அரசியல் இலாபங்களுக்காக எங்களைப் பழிவாங்க வேண்டாம்- நாமல் ராஜபக்ஷ

 


அரசியல்வாதிகள் மற்றும் அவர்களது குடும்பங்களை இலக்காகக் கொள்ளாமல் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் அரசாங்கம் தனது நேரத்தைச் செலவழித்தால், அது பொருளாதாரத்தை வலுப்படுத்தவும், மேலும் குடிமக்கள் ஒரு நாளைக்கு மூன்று வேளை உணவுண்ண உதவுவதுடன் அது மிகவும் பயனுள்ளதாக அமையும் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

யோஷித ராஜபக்ஷவிற்கு பிணை வழங்கப்பட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

"அரசியல் வேட்டை நடக்கும்போது, ​​​​நாங்கள் உதவிக்காக நீதிமன்றத்தையே நம்புகிறோம், நான் பாராளுமன்றத்தில் குரல் எழுப்புகிறேன், ஆனால் அதேவேளை என் சகோதரர் சிறையில் அடைக்கப்படுகிறார்" என்று அவர் கூறினார்.

நான் பாராளுமன்றத்தில் குரல் எழுப்புகிறேன், அதற்குப் பதிலாக என் தம்பி சிறையில் அடைக்கப்படுகிறார்

எமக்கு எதிராக சட்டங்களை அமுல்படுத்துவது சட்டவிரோதமானது அல்ல, ஆனால் யோஷிதவை கைது செய்வதற்காக அதிவேக நெடுஞ்சாலை ஊடாக பெலியத்தவிற்கு வந்தது நியாயமற்றது எனவும் அவர் மேலும் தெரிவித்தார். 

"யோஷித ராஜபக்சவுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்துவது பிரச்சினையல்ல, ஆனால் அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தி அவரை கைது செய்த விதம் தவறு. அவர்கள் எமக்கு அறிவித்திருந்தால் திங்கள் அல்லது ஞாயிற்றுக்கிழமை நாங்கள் ஆஜராகியிருப்போம்" என்றார்.

உரிய நடைமுறைகளை அரசாங்கம் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் மேலும் வலியுறுத்தினார். 

“ஊடகக் காட்சிகளில் ஈடுபட்டு பொதுப் பணத்தை வீணடிப்பதை விடுத்து, நாங்கள் ஏதேனும் தவறு செய்திருந்தால் நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்று நிரூபிக்குமாறு அரசாங்கத்திடம் கேட்டுக் கொள்கிறோம். அரசியல் இலாபங்களுக்காக எங்களைப் பழிவாங்க வேண்டாம்” என நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


  Comments - 0



அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .