மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேசத்தில் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை.

 

 















 

மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதாதார சேவைகள் பணிமனைக்குட்பட்ட  வாழைச்சேனை, கோறளைப்பற்று மத்தி, ஒட்டமாவடி ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை    வியாழக்கிழமை இடம்பெற்றது.

இந்நடவடிக்கையின் போது நேரடி பார்வையின் கீழ்  மட்டக்களப்பு மாவட்ட சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் வைத்தியர் எஸ்.சரவணபவன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய  மலேரியா தடைஇயக்க வைத்திய அதிகாரி எம்.அச்சுதன்  அதனோடு பூச்சியல் ஆய்வாளர்கள்   பொது சுகாதார வெளிகள உத்தியோகத்தர்கள்  தெளிகருவி இயக்குனர்கள்  டெங்கு கள பணியாளர்கள் ஆகியோர் பங்கு பற்றினர்

இதன்போது வீடுகள் மற்றும் பொது இடங்களில்  டெங்கு குடம்பிகள் உருவாகும் இடங்களை கண்டறிந்து அவற்றை உடனடியாக அகற்றி  வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச சபை உழவு இயந்திரத்தில் ஒப்படைக்கபட்டது .

அத்தோடு டெங்கு குடம்பிகள் உருவாகாது வண்ணம் மக்களுக்கு அறிவித்தால் வழங்கப்பட்டது.