தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் பொலிஸாரின் பஸ் சோதனைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பஸ் பணிப்புறக்கணிப்பு நடத்த முற்படுவது ஏன்

 


 

பொலிஸாரினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள பஸ் சோதனைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆரம்பிக்கப்படவுள்ள பஸ் பணிப்புறக்கணிப்பு தொடர்பில் இன்று(08) இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

‘க்ளீன் ஸ்ரீலங்கா’ வேலைத்திட்டம் தொடர்பில் பஸ் சங்கங்கள் மேற்கொள்ளவுள்ள எதிர்கால நடவடிக்கைகள் குறித்து தீர்மானம் எடுப்பதற்காகவே இன்று தமது பிரதிநிதிகளை கொழும்புக்கு அழைத்துள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.