, வடக்கு மற்றும் கிழக்கில் பாரிய அறவழிப் போராட்டம் முன்னெடுக்கப்படும்- முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம்

 


தமிழ் அரசியல் கைதிகளை எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டுக்கு முன் விடுதலை செய்ய வேண்டும். இல்லாவிட்டால், வடக்கு மற்றும் கிழக்கில் பாரிய அறவழிப் போராட்டம் முன்னெடுக்கப்படும் என தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நெல்லியடி பொதுச் சந்தையில் நேற்று நடைபெற்ற கையெழுத்துப் போராட்டத்தின்போது கருத்து தெரிவித்த சிவாஜிலிங்கம், “நீண்ட காலமாக தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படாமல் உள்ளனர். ஆட்சி மாறினாலும் நிலைமை மாறவில்லை. மஹிந்த ராஜபக்ஷ காலத்திலிருந்து இன்று வரைக்கும் எந்தவொரு முன்னேற்றமும் காணப்படவில்லை,” என்று கூறினார்.

“நாட்டின் தற்போதைய நீதி அமைச்சர், “அரசியல் கைதிகள் எவரும் இல்லை” என்று கூறுவது மிகவும் கண்டிக்கத்தக்கது. தமிழ் அரசியல் கைதிகளில் தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்க வேண்டும்” என்றும், “தண்டனை விதிக்கப்படாதவர்களை வழக்குகளில் இருந்து விடுதலை செய்ய வேண்டும். ஆனால், அரசு தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கத் தயங்குகிறது” என்றும் சிவாஜிலிங்கம் மேலும் தெரிவித்தாா்.