இலங்கை கடற்பரப்புக்குள் எந்தவொரு நாட்டின் படகும் அத்து மீறி நுழைய முடியாது.

 


 

 இலங்கை கடற்பரப்புக்குள் வரும் எந்தவொரு படகுக்கும் இடமளிக்க முடியாதென்றும் அதுதொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்சல் சம்பத் துய்யகொந்தா தெரிவித்தார்.

மேலும், அது இந்திய படகாக இருந்தாலும் சரி வேறு நாட்டின் படகாக இருந்தாலும் சரி கட்டாயம் கண்காணிக்கப்படும்.

ஆயினும் நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது துரதிர்ஷ்டவசமாக துப்பாக்கி இயங்கியதால் இந்திய மீனவர்கள் இருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பாதுகாப்பு அமைச்சில் இன்று (29) இடம்பெற்று வரும் செய்தியாளர் மாநாட்டிலேயே இதனைக் குறிப்பிட்டார்.