வரதன்
கிரான் பிரதேச செயலகப் பிரிவில் அடைமழை மற்றும் வான் கதவுகள் திறக்கப்பட்டதன் காரணமாக இப்பகுதி மக்கள் இரண்டு வாரங்களாக தங்களது இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன் அசர தேவைகளுக்காக உயிரை பணயம் வைத்து நகருக்கு வரவேண்டி உள்ளது..
மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலகப் பிரிவில் கடந்த சில நாட்களாக பெய்த அடைமழை மற்றும் வான் கதவுகள் திறக்கப்பட்டதன் காரணமாக இப்பகுதி மக்கள் இரண்டு வாரங்களாக தங்களது இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன் அசர தேவைகளுக்காக உயிரை பணயம் வைத்து கிரான் நகருக்கு வரவேண்டி உள்ளது .
கடந்த இரண்டு நாட்களுக்கு முன் இரண்டு விவசாயிகள் மரக்கறிகளை பெற்றுக் கொண்டு வீடு திரும்பும் போது காட்டு வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்துள்ளனர் இருப்பினும் அரசாங்கத்தினால் படகு பாதை சேவை முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதிலும் அவத்தான வீதிகளில் பயணம் செய்து மிகவும் சிரமப்படுவதை இன்றும் காணக் கூடியதாக உள்ளது.
இப்பகுதியிலுள்ள ராணுவத்தினர் மனிதாபிமான உதவிகளை முன்னெடுத்து வருகின்ற போதிலும் தங்களது அத்தியாவசிய தேவைகளுக்காக இவர்கள் மிகவும் ஆபத்தான பயணங்களை மேற்கொண்டு வருவதை காணக் கூடியதாக உள்ளது இரவு வேலைகளில் தங்களுக்கு மருத்துவ தேவைகளுக்காக பயன்படுத்த இந்த வித போக்குவரத்துகளும் இன்றி தாம் கஷ்டப்படுவதாகவும் காட்டு யானை அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் மிகவும் ஆபத்தான வாழ்க்கையை இவர்கள் தற்போதும் வாழ்ந்து வருகின்றதை காணக் கூடியதாக உள்ளது