மட்டக்களப்பு மாவட்ட விவசாய திணைக்களத்தின் ஏற்பாட்டில் பிரதி விவசாய பணிப்பாளர் எம். பரமேஸ்வரன் தலைமையில் பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது.








கொக்கட்டிச்சோலை பண்டாரவெளியில் நடைபெற்ற நிகழ்வில் விவசாய அமைச்சின் கிழக்கு மாகாண செயலாளர் H.E.M.W.G திசாநாயக்க பிரதம அதிதியாக கலந்துகொண்டதோடு கௌரவ அதிதிகளாக கமநல அபிவிருத்தி திணைக்களத்தின்  மட்டக்களப்பு மாவட்ட பிரதி ஆணையாளர் ஜெகன்நாத், கால்நடை வைத்திய அதிகாரி ஏ.முகுந்தன், உதவி விவசாய பணிப்பாளர்களான திருமதி சுகன்யா, சங்கீதா, அமீன், கருணாரத்தின, பேரின்பராஜா, வித்தியாசினி விவசாய காப்புறுதி சபையின் உதவி பணிப்பாளர், விவசாய போதனாசிரியர்கள், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், ஏனைய திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் விவசாயிகள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

பாரம்பரிய முறைப்படி அருவி வெட்டி பொங்கல் வைத்து வழிபாடு மேற்கொள்ளப்பட்டதோடு மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தன.