மன்னார் நீதிமன்றத்திற்கு முன்னால் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .

 


மன்னார் நீதிமன்றத்திற்கு முன்னால் சற்றுமுன்னர் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூட்டினை மேற்கொண்டு தப்பிச் சென்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தார்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர்கள் வழக்கு விசாரணை ஒன்றிற்காக நீதிமன்றத்திற்கு வந்துள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.