மட்டக்களப்பு - கல்லடி டச்பார் புனித இஞ்ஞாசியார் ஆலயத்தில் பண்பாட்டு திருப்பலி.

 

 


 


 


உழுதுண்டு வாழும் தமிழர் பண்பாட்டின் நன்றிப் பெருநாளாம் உழவர் திருநாளை சிறப்பிக்கு விசேட தைத்திருநாள் பண்பாட்டு திருப்பலி மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கத்தோலிக்க தேவாலயங்களில் பாரம்பரிய கலாசார முறையில்  நேற்று காலை ஒப்புக்கொடுக்கப்பட்டது.

உழவர் திருநாளாம் தைத்திருநாளை சிறப்பிக்கும் வகையில் சமய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையிலும் மட்டக்களப்பு - கல்லடி டச்பார் புனித இஞ்ஞாசியார் ஆலயத்தின் பங்குத்தந்தை அருட்தந்தை லோரன்ஸ் லோகநாதன் அடிகளாரின் ஏற்பாட்டில் அருட்பணி பிலிப் அடிகளார் மற்றும் அருட்பணி ஜோன் யோசப்மேரி அடிகளார் ஆகியோர் இணைந்து குறித்த பண்பாட்டு திருப்பலியினை ஒப்புக்கொடுத்துள்ளனர்.

 பண்பாட்டு திருப்பலியில் நாட்டில் மதங்களிடையே நல்லிணக்கத்தையும் சகவாழ்வினையும் ஏற்படுத்தும் வகையில் நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கு ஆசிவேண்டி இவ்விசேட பொங்கல் பண்பாட்டு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

இவ்விசேட திருப்பலியில் அருட்சகோதரிகள், பங்கு மக்கள் மற்றும் இறை விசுவாசிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.