செய்தி ஆசிரியர்
அண்மைய நாட்களில் மட்டக்களப்பில் பெய்த கடும்மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிப்படைந்திருந்தது.
இந்நிலையில் தற்போது மழையுடனான காலநிலை சீரடைந்துள்ளதால் நாளைய தினம் செவ்வாய்க்கிழமை (14) கொண்டாடப்படவுள்ள பொங்கல் பண்டிகைக்கான பொருட்களைக் கொள்வனவு செய்யும் நடவடிக்கையில் பொது மக்கள் ஈடுபட்டிருப்பதைக் காணமுடிகிறது.
மட்டக்களப்பு பொதுச்சந்தை மற்றும் புறநகர்ப் பகுதிகளான இருதயபுரம், ஜெயந்திபுரம், கல்லடி மற்றும் ஆரையம்பதி வீதியோரங்களில் விற்பனை செய்யப்படும் பொங்கல் பானை, அகப்பை, அரிசி, சீனி, சர்க்கரை, கரும்பு மற்றும் பட்டாசு வகைகளை வாங்கிச் செல்வதை காணக்கூடியதாக உள்ளது .
என்னதான் பொருளாதாரப் பிரச்சினை , வறுமை என்றாலும் தமிழர்கள் தமது பாரம்பரிய கலாச்சார விழுமியங்களை தொன்மை தொட்டு கொண்டாடி வருவது பல ஆயிரம் வருடங்களை தாண்டியும் தொடர்கிறது .