விசேட வாகனச் சோதனை நடவடிக்கையைத் தொடர்ந்து விபத்துக்கள் குறைவடைந்துள்ளது

 



அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட விசேட வாகனச் சோதனை நடவடிக்கையைத் தொடர்ந்து விபத்துக்கள் குறைவடைந்துள்ளதாக இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மானதுங்க, 2024 டிசம்பர் 22 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த விசேட நடவடிக்கை மிகவும் வெற்றிகரமானதாக இருப்பதாக தெரிவித்தார்.

உயிரிழக்கும் வீதி விபத்துக்கள் நாளொன்றுக்கு 04 முதல் 05 சம்பவங்கள் வரை குறைந்துள்ளதுடன், பாரதூரமான விபத்துக்கள் அல்லது கடுமையான காயங்களுக்கு உள்ளானவை 08-10 சம்பவங்களாக குறைந்துள்ளதாகவும் அவர் கூறினார். 

வாகனங்களின் சாரதிகள் மற்றும் உரிமையாளர்கள் தமது வாகனங்களில் உள்ள அனைத்து சட்டவிரோத பாகங்களையும் அகற்றுமாறு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க மேலும் கோரியுள்ளார். 

இந்த வாகன நடவடிக்கையை பல்வேறு தரப்பினர் தடுக்க முற்பட்டாலும், இலங்கை பொலிஸ் அதனை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.