அரியம் பாக்கியசெல்வம்
மாவை எனும் மாபெரும் சரித்திரம் அறுபது ஆண்டுகளாக தமிழர் வரலாற்றில் தவிர்க்க முடியாத ஆளுமையாக இருந்தவர்
சோமசுந்தரம் சேனாதிராஜா எனும் இயற்பெயர் கொண்ட மாவை சேனாதிராஜாவின் யாழ்ப்பாணம் மாவிட்டபுரத்தில் 1942 அக்டோபர் 27 இல் பிறந்தார்.
இலங்கைத் தமிழ்த் தேசிய இயக்கத்தில் செயல்பட்டு 1961 சத்தியாக்கிரகப் போராட்டத்தில் பங்குபற்றினார் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணியில் 1962 இல் இணைந்தார்.1966 முதல் 1969 வரை ஈழத்தமிழர் இளைஞர் இயக்கத்தின் செயலாளராகப் பணியாற்றினார். 1969 முதல் 1983 வரையான காலப்பகுதியில் இலங்கை அரசால் கைது செய்யப்பட்டு எட்டு வெவ்வேறு சிறைச்சாலைகளில் மொத்தம் ஏழாண்டுகள் சிறையில் கழித்தார்.
1972 இல் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தமிழ் இளைஞர் பேரவரியின் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
சேனாதிராஜா 1989 நாடாளுமன்றத் தேர்தலில் ஈ.என்.டி.எல்.எஃப்/ஈ.பி.ஆர்.எல்.எஃப்/டெலோ/தவிகூ கூட்டணி சார்பில் யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிட்டு கூட்டணியின் வேட்பாளர்களில் 13வதாக வந்து தோல்வியடைந்தார். ஆனாலும், அ. அமிர்தலிங்கம் 1989 சூலை 13 படுகொலை செய்யப்பட்டதை அடுத்து அவரின் இடத்திற்கு சேனாதிராசா தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டார். 1999 சூலை 29 இல் நீலன் திருச்செல்வம் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து மீண்டும், தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றம் சென்றார்.
2000ஆம் ஆண்டு தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி (த.வி.கூ) வேட்பாளராக யாழ் மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று மீண்டும் நாடாளுமன்றம் சென்றார். 2001 அக்டோபர் 20 இல் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ விடுதலை இயக்கம், தவிகூ ஆகிய கட்சிகள் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (ததேகூ) என்ற கூட்டமைப்பை நிறுவின. 2001 தேர்தலில் ததேகூ சார்பாக யாழ் மாவடத்தில் போட்டியிட்டு மீண்டும் நாடாளுமன்றம் சென்றார். 2004, 2010, 2015 தேர்தல்களில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
செப்டம்பர் , 2014இல் சேனாதிராசா இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராக தெரிவு செய்யப்பட்டார் நீண்ட காலம் இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவராக இருந்த மாவை சேனாதிராசா தமிழ் தேசியக்கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் அமரர் இராஜவரோதயம் சம்பந்தன் அவர்களின் பெரும் மதிப்பிற்குரியவராக திகழ்ந்தார்
தமிழரசுக்கட்சியை வடக்குக்கு அப்பால் கிழக்கில் கட்டி எழுப்புவதில் மாவை அண்ணர் ஆற்றிய பணி யாராலும் நிரப்பப்படமுடியாது தமிழரசுக்கட்சியை கட்டி எழுப்பப்பட வேண்டும் என்பதில் மாவை அண்ணணின் பங்கு அளப்பரியது
தமிழரசுக்கட்சியின் மத்திய குழு உறுப்பினர்களின் அண்மைக்கால செயற்பாடு காரணமாக கடுமையான மனஉளைச்சலுக்கு உள்ளாகி இருந்தார் குறிப்பாக தமிழரசுக்கட்சியை அழிக்கவந்த சுமந்திரன் சத்தியலிங்கத்தின் சூழ்ச்சியினால் மனவேதனை அடைந்தார் மாவை அண்ணன் எண்ணியிருந்தால் அண்மையில் சுத்துமாத்து சுமந்திரன் அணி கட்சியின் தலைமை பதவியில் இருந்து மாவை அண்ணரை விலகும் படி கூறிய போது அவர் வழக்கு தொடர்ந்து தன் பதவியை தக்கவைத்திருக்க முடியும் ஆனால் அவர் அவ்வாறு நடந்து கொள்ளவிரும்பவில்லை காரணம் தான் வளர்த்த கட்சிக்கு எதிராக தான் ஒருபோதும் வழக்கு தொடுக்க மாட்டேன் எனக்கூறினார் இவ்வாறு தொடர்ந்து மனவேதனையில் இருந்த மாவை எனும் ஆணிவேர் தன் அறுபதாண்டு அரசியல் பயணத்தில் இருந்து ஓய்வெடுத்துக் கொண்டது
தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் தனது 82வது வயதில் இன்று காலமானார்