இலங்கையில் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் பயங்கரவாத அச்சுறுத்தல் ஏற்படக் கூடிய சாத்தியம் இருப்பதாக பிரிட்டன் பயணிகளுக்கு இங்கிலாந்து வெளியுறவு, காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலகம் (FCDO) கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பிரபலமான சுற்றுலா தலங்களை பயங்கரவாத குழுக்கள் குறிவைக்க வாய்ப்புள்ளதாக, பிரிட்டன் வெளியுறவு அலுவலகம் கடந்த 2024ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14ஆம் திகதி தமது பயண ஆலோசனையில் தெரிவித்திருந்தது. அதனை புதுப்பித்து வெளியிட்டுள்ள ஆலோசனையிலேயே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.