மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு  இன்று கமநல அபிவிருத்தி திணைக்களத்திக்கு கள விஜயம் ஒன்றை மேற்கொண்டு இருந்தார்

 





வரதன்


 

 மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக வெள்ள அனர்த்தத்தினால் விவசாய நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டு வருவதை அடுத்து மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவரும் பிரதி அமைச்சருமான அருண் ஹேமச்சந்திர அவர்களின் பணிப்பின் பேரில் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு  இன்று மாவட்ட விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் சம்பந்தமாக இன்று கமநல அபிவிருத்தி திணைக்களத்திக்கு கள விஜயம் ஒன்றை மேற்கொண்டு இருந்தார்


 கமநல அபிவிருத்தி திணைக்கள  உதவி  ஆணையாளர்k. ஜெகநாத்திடம்  மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள சேத விபரங்கள் பற்றியும் காப்பருதி வழங்குவது சம்பந்தமாகவும் விவசாயிகளுக்குரிய உற மானியம் வழங்குதல் மற்றும்

 கடந்த வெள்ள அனர்த்தத்தின் போது பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய கொடுப்பனவுகள் வழங்குதல் பற்றியும் படுவான் கரை பகுதியிலுள்ள  கமநல அபிவிருத்தி நிலையங்களின் கட்டிடங்கள் ஆலணி பற்றாக்குறைகள் சம்பந்தமாகவும்

 மாவட்டத்தில் கமநல  அபிவிருத்தி திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் பயிற்சி சம்பந்தமாகவும் சிறிய நீர்ப்பாசன குளங்கள் புனரமைப்பு சம்பந்தமாகவும் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் சம்பந்தமாகவும் உதவி ஆணையாளர் ஜெகநாத்திடம் கேட்டு அறிந்து கொண்டதுடன்


 மாவட்டத்திலுள்ள கமநல அபிவிருத்தி திணைக்கள  பணியாற்றும்  ஊழியர் களிடம் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் சம்பந்தமாகவும்  கேட்டறிந்து கொண்டதுடன் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட உள்ள விவசாய அபிவிருத்தி சம்பந்தமான வேலைத்திட்டங்களையும் இங்கு கலந்துரையாடினார்


பாராளுமன்ற உறுப்பினரின் மக்கள் தொடர்பு அதிகாரி u.வேனுஜன் மற்றும் மாவட்ட  கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் இந்த விசேட கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்