( காரைதீவு குறூப் நிருபர் சகா)
திருக்கோவில் பிரதேச தம்பட்டை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த தம்பிலுவிலை சேர்ந்த சட்டத்தரணி லயன் எஸ்.சசிராஜ் சிகிச்சை பலனின்றி காலமானார் .
கடந்த திங்கட்கிழமை மோட்டார் சைக்கிளில் பயணித்துகொண்டிருந்த போது தம்பட்டைப் பிரதேசத்தில் வொலரோ ரக கென்றர் வாகனமொன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகி படுகாயமடைந்து அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார் .
பின்னர் கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.
நேற்றிரவு (வியாழன் ) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் .
தம்பிலுவில்லை சேர்ந்த சட்டத்தரணியும் திடீர் மரண விசாரனை அதிகாரியுமான சசிராஜ், இலங்கை சட்டக்கல்லுரியில் பயின்று சட்டத்தரணியாக வெளியேறினார்.
கொழும்பு பல்கலையில் தடவையியல் மருத்து துறையில் டிப்ளோமா பட்டம்பெற்றவர். அக்கரைப்பற்று சட்டத்தரணிகள் சங்க அங்கத்தவர் என்பதுடன் திடீர் மரண விசாரணை அதிகாரியாகவும் செயற்பட்டிருந்தார் .
மேலும் தனது சொந்த நிதியில் பல்வேறு சமூக சேவைகளும் செய்துவந்துள்ளார்.
அண்மையில் பாண்டிருப்பில் மேட்டு வட்டை வெள்ளப் பாதிப்புக்கு உள்ளான மக்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் பெறுமதியான நுளம்பு வலைகளை சொந்த செலவில் வழங்கி வைத்தார்.