முன் பள்ளி ஆசிரியர்களுக்கான ஆறுதல் டிப்ளோமா பயிற்சி வகுப்பு இன்று (2025.01.18) மட்/தேரேசா பெண்கள் பாடசாலை மண்டபத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப் பட்டது.
மட்டக்களப்பு வலயக் கல்வி அலுவலக முன் பள்ளி உதவிக் கல்விப் பணிப்பாளர் திருமதி அனுரேகா விவேகானந்தன் பயிற்சி வகுப்பை ஆரம்பித்து வைத்தார் .
மட்டக்களப்பு, மட்டக்களப்பு மேற்கு, பட்டிருப்பு ஆகிய மூன்று கல்வி வலயத்திற்கு உட்பட்ட 52 முன் பள்ளி ஆசிரியர்கள் இந்த பயிற்சி வகுப்பில் பங்கேற்றிருந்தனர் .
மேற்கு கல்வி வலய முன் பள்ளி உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு.கணேஷ் அவர்கள் வளவாளராக கலந்து கொண்டார் .