அண்மைக்காலமாக சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட அமைச்சர்கள் வரை சாதாரண மக்களோடு பேருந்து மற்றும் தொடருந்து என பயணிப்பதை காணக்கூடியதாகவுள்ளது.
சாதரண மக்களின் வாழ்க்கை சூழலை தெரிந்துகொள்வதற்காகவும் ஆடம்பரமற்ற அரசியல் கலாச்சாரத்தை உருவாக்குவதற்காகவும் இவ்வாறு செயல்படுவதாக அவர்கள் தெரிவித்திருந்தனர்.
இந்தநிலையில், நேற்றைய தினம் (23) தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் முச்சக்கர வண்டியில் நாடாளுமன்ற அமர்வுக்குச் சென்றுள்ளார்.
வவுனியாவில் இருந்து பேரூந்தில் கொழும்பு சென்ற அவர் அங்கு தனது விடுதியில் இருந்து முச்சக்கர வண்டி ஒன்றை வாடகைக்கு அமர்த்தி அதில் நாடாளுமன்றம் சென்று நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டுள்ளார்.