வரதன்
கிழக்கு மாகாணத்தில் நிலவிய சீரற்ற கால நிலை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த நூற்றுக்கணக்கான ஏக்கர் வேளாண்மை செய்கை அறக் கொட்டி நோய் தாக்கத்துக்கு உள்ளானதால் அறுவடை பாதிப்பு
கடந்த சில தின நாட்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவிய தொடர்ச்சியான மலை வீழ்ச்சி மற்றும் பெரிய குளங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்ட காரணத்தினால் படுவான் கரை பகுதியில் பல நூற்றுக்கணக்கான வயல் நிலங்கள் பாதிக்கப்பட்டன
அறுவடைக்கு தயாரான வயல் நிலங்களில் நீர் காணப்படுவதனாலும் இப்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவும் பணி உடன் காலநிலை காரணமாக அறக் கொட்டி நோய் தாக்கத்தினால் அறுவடைக்கு தயாராக இருந்த பல நூற்றுக்கணக்கான ஏக்கர் பாதிக்கப்பட்டு உள்ளது எனவே அதற்குரிய நஷ்ட ஈடுகளை தருமாறு அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுக்கின்றனர்
மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்டபத்தடி கொக்கட்டிச்சோலை பழுகாமம் வெள்ளாவெளி கிரான் வாகரை ஆகிய கமல சேவை பிரிவுக்குட்பட்ட வயல் நிலங்களிலே இவ்வாறு அறக்கோட்டி நோய் தாக்கத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளது இந்த நோய்க்கு உள்ளான வயல் நிலங்களில் உள்ள நெற் கதிர்கள் பாதிக்கப்படுவது உடன் இதனால் விளைச்சலும் பெருமளவு குறையும் என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்
எனவே எதிர்வரும் காலங்களில் இவ்வாறான அறுவடை காலங்களில் மாவட்டத்தில் பெரிய குளங்களின் வான் கதவுகளை திறப்பதனை தடுக்குமாறும் அதற்குரிய திட்டங்களை எதிர்காலத்தில் அரசாங்கத்தில் வகுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுப்பது உடன் தங்களுக்குரிய பாதிப்பு நிவாரணங்களை தந்து உதவுமாறு அரசாங்கத்திடம் இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்