வெருகல் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியின் வட்டவான் பகுதியில் திங்கட்கிழமை (06) மாலை தொல்லியல் திணைக்களத்தினால் நடப்பட்டுள்ள பதாகையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
“1 KM வட்டவான் தொல்லியல் நிலையம்” என குறிப்பிட்டு குறித்த பதாகை நடப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மத்தியில் இது பெரும் பரபரப்பையும், விசனத்தையும் ஏற்பட்டுள்ளது. இது குறித்து தொல்லியல் திணைக்களத்தின் பதாகை எதிர்ப்பு தெரிவித்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.