மட்டக்களப்பில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கடுமையான மழையினால் தாழ்நிலப் பகுதிகள் நீரில் முழ்கியுள்ளதுடன், சில குளங்களின் வான்கதவுகளு சில அடிகளுக்கு உயர்த்திவிடப்பட்டுள்ளன.
அதன் அடிப்படையில் 4 நாட்களுக்கு முன்னர் உன்னிச்சைக்குளத்தின் நீர் மட்டம் அதிகரித்ததனால் மூன்று வான்கதவுகளையும் சிறிது சிறிதாக திறந்து தற்போது
5 அடிக்கு 3 வான்கதவுகளும் திறந்து விடப்பட்டுள்ளன.
உன்னிச்சை குளத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளமை காரணமாக குளத்தினை அண்டிய பிரதேசங்கள் மற்றும் தாழ்நிலப் பகுதிகளில் வாழும் மக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு மட்டக்களப்பு மாவட்ட அனர்த்தமுகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
நீர்மட்டம் அதிகரிக்குமாயின் தாழ்நிலப் பகுதிகளில் இருந்து வெளியேறி பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்ல தயாராக இருக்குமாறும் குளங்களில் நீராடுவதை தவிர்ப்பதுடன் மீன்பிடி நடவடிக்கைகளில் மிக அவதானத்துடன் இருக்குமாறு மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் ஏ.எஸ்.எம்.சியாத் கேட்டுக்கொண்டுள்ளார் .