மட்டக்களப்பு-வாழைச்சேனை பிரதான வீதியில் சந்தியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் ஓட்டமாவடியைச்சேர்ந்த பலர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எரிபொருள் கொள்கலன் லொறியின் பின்னால் மோதுண்டே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இதில் முச்சக்கர வண்டியில் பயணித்தவர்களே காயமடைந்துள்ளனர்.