தென் கொரியாவில் தொழில்வாங்கித் தருவதாகக் கூறி மக்களை ஏமாற்றியது தொடர்பில் ஒரு பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

 


தென் கொரியாவில் E8 விசா பிரிவின் கீழ் தொழில்வாங்கித் தருவதாகக் கூறி மக்களை ஏமாற்றியதற்காக ஒரு பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு கிடைத்த 5 முறைப்பாடுகளின் அடிப்படையில், பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் மேற்படி அனுமதிப்பத்திரம் பெறாத வேலைவாய்ப்பு நிறுவனத்தை சுற்றி வளைத்து சந்தேகநபரான பெண்ணை கைது செய்துள்ளனர்.

தென் கொரியாவில் E8 விசா பிரிவில் வேலைவாய்ப்பு வழங்குவதாக உறுதியளித்து, ஒருவரிடமிருந்து கிட்டத்தட்ட இரண்டு இலட்சம் ரூபா வரையில் பெற்றிருப்பது தெரியவந்துள்ளது.

அதன்படி, முறைப்பாட்டாளர்களிடம் இருந்து சுமார் 1.3 மில்லியன் ரூபா வரையில் மோசடி செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்  இன்று (12) பூகொட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.