கிழக்கு மாகாணதில் உள்ள தமிழர்கள் சீறற்ற கால நிலைக்கு மத்தியிலும் தைத்திருநாளை கொண்டாடுவதற்கு உற்சாகத்துடன் தயாராகி வருகின்றனர்

 

 

 

 




 



வரதன்


 

 

 கிழக்கு மாகாணதில் உள்ள தமிழர்கள் சீறற்ற  கால நிலைக்கு மத்தியிலும் தைத்திருநாளை கொண்டாடுவதற்கு    உற்சாகத்துடன் தயாராகி வருகின்றனர் கடந்த வருடத்தை விட இம்முறை தைப்பொங்கல் வியாபாரம் சிறப்பாக உள்ளதாகவும் மழை காரணமாக சற்று பாதிக்கப்பட்டுள்ளது
சீறற்ற  கால நிலைக்கு மத்தியிலும் தைத்திருநாளை கொண்டாடுவதற்கு மட்டக்களப்பு மாவட்ட மக்களும் தயாராகி  வருகின்றனர்.மட்டக்களப்பு மாவட்டத்தில் வர்த்தக நிலையங்களிலும் பொதுச்சந்தை பகுதிகளிலும் மக்கள் தங்களுக்கு வேண்டிய அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதை காணக்கூடியதாக இருக்கின்றது

பொங்கலுக்குரிய பொருட்கள் மற்றும் உடைகள் கொள்வனவு செய்வதில் மக்கள் அதிகளவில் ஆர்வம் காட்டிவருகின்றனர்.மட்டக்களப்பு மாவட்டத்தின் பொதுச்சந்தை,மட்டக்களப்பு நகரம் ஆகிய பகுதிகளில் மக்கள் அதிகளவில் பொருட்கொள்வனவில் ஈடுபடுவதை காணமுடிந்தது மட்டக்களப்பு மாவட்ட பல பகுதிகளிலுமிருந்து பொதுமக்கள் வருகைதந்து பொருட்கொள்வனவில் ஈடுபட்டுவருகின்றனர். இவர்களுக்கான போக்குவரத்து வசதியை அரசாங்க அதிபரின் பணிப்புரைக்க அமைவாக இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் தனியார் பேருந்துகள் சேவையில் ஈடுபட்டிருந்தன

மழை குறைந்துவருவதன் காரணமாக தைத்திருநாளை கொண்டாடுவதற்கு மக்கள் ஆர்வத்துடன் கொள்வனவு செய்து  வருகின்றனர்.  தமக்கு வேண்டிய அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக இன்று மட்டக்களப்பு நகர சந்தைக்கு வருவதை காணக் கூடியதாக உள்ளது  

மட்டு நகரின் பிரதான இடங்களில் தைப்பொங்கல் வியாபாரம் நண்பகலுக்குப் பிறகு முன்னெடுக்கப்பட்டு வருவதை காணக் கூடியதாக உள்ளதுடன் கடந்த வருடத்தை விட இம்முறை தைப்பொங்கல் வியாபாரம் சிறப்பாக உள்ளதாகவும் மழை காரணமாக சற்று பாதிக்கப்பட்டுள்ள போதிலும் தற்போது மழையுடன் கூடிய கால நிலை சற்று ஓய்ந்துள்ளதினால் தற்போது வியாபாரம் சிறப்பாக இடம் பெறுவதாக மாவட்ட வீதியோர வியாபாரிகள் கருத்து தெரிவித்தனர்