சீனாவில் பரவி வரும் HMPV வைரஸ் குறித்து தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த
தேவையில்லை என்றும், இந்த வைரஸ் புதிய வைரஸ் அல்ல என்றும், 20 ஆண்டுகளாக
இருந்து வரும் வைரஸ் என்றும் சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
2023 டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் இலங்கையிலும் HMPV தொற்றுக்குள்ளானவர்கள் கண்டறியப்பட்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரிசோதனைகளின் மூலம் தெரியவந்துள்ளதுடன், HMPV வைரஸ் தொடர்பான பரிசோதனைகள்
இவ்வருடம் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கடந்த வருடம் கண்டி பிரதேசத்திலும் இந்த வைரஸ் தொற்றுக்கு
உள்ளானவர்கள் கண்டறியப்பட்டதாக சுகாதார திணைக்களம் மேலும்
குறிப்பிட்டுள்ளது.