மட்டக்களப்பு Jaz-Reel முன் பள்ளி பாடசாலையின் 10 வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு பாடசாலை நிர்வாகம் இன்றைய தினம் சமூகத்திற்கு பயன்படக்கூடிய செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தது .
குழந்தை பருவம் தொடக்கம் பிள்ளைகளின் மனப்பாங்கில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இரத்த தான முகாம் ஒன்றை நடத்தி இருந்தது, முன்பள்ளி ஆசிரியர்களும் இரத்ததானம் வழங்கி இருந்தார்கள். அத்தோடு போதனா வைத்தியசாலை சிறுவர் விடுதி பிள்ளைகளை மகிழ்விக்கும் முகமாக விளையாட்டு உபகரணங்கள் போன்றவற்றை வழங்கி வைத்தது .
அதனைத் தொடர்ந்து Jaz-Reel முன் பள்ளி பாடசாலை சிறார்களுக்கு இனிப்பு பண்டங்கள் பகிர்ந்து மகிழ்வித்தார்கள்
இன்றைய நிகழ்வுகளுக்கு மட்டக்களப்பு வலயக் கல்வி அலுவலகத்தின் முன் பிள்ளை பருவ உதவிக் கல்விப் பணிப்பாளர் திருமதி அனுரேகா விவேகானந்தன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் .
அத்தோடு Jaz-Reel முன் பள்ளி பாடசாலை நிகழ்வுக்கு இலங்கை வங்கி முகாமையாளர் , நிறுவக தலைவர் அதிபர் ஆசிரியர்கள் முன் பள்ளி அபிவிருத்தி உறுப்பினர்கள் போன்றோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.