மட்டக்களப்பு இருதயபுரம் புனித வின்சென்ட் டி பவுல் பாலர் பாடசாலையின் அதிபர் அன்டோனியா சாந்தி ரெஜிஸ் பிரபாகரனின் தலைமையில் இடம்பெற்ற பொங்கல் விழா நிகழ்வில் அதிதிகளாக மட்டக்களப்பு கல்வி வலய முன்பள்ளி உதவிக் கல்விப் பணிப்பாளர் நாயகம் அனுரேகா விவேகானந்தன், திரு இருதயநாதர் ஆலய பங்குத்தந்தை அருட்பணி கிளமெண்ட் அன்னதாஸ், முன்பள்ளிப் பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் திருச்செல்வம் மேகராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அத்தோடு ஆலய பங்குச்சபை அங்கத்தவர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் எனப்பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
40 ஆவது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ள பாலர் பாடசாலையின் ஆசிரியர்கள் பழைய
மாணவர்களாலும் பங்குச்சபையாலும் கௌரவிக்கப்பட்டனர்.
பொங்கல் விழாவில் நெல் அறுவடை செய்தல், சூடு அடித்தல், தூர்த்துதல், நெல் குற்றுதல், சுளகினால் புடைத்தல் மற்றும் பொங்கல் பொங்கும் சம்பிரதாயங்கள் பாலர் பாடசாலை மாணவர்களால் நிகழ்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.